குருநாகலில் 356 முஸ்லிம் கிராமங்களில் சோதனை - 152 பேர் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்தின் பின்னர் நாடு முழுதும் முன்னெடுக்கப்பட்டுவரும் சோதனைகள் மற்றும் தேடுதல்களில் குருணாகல் மாவட்டத்தில் மட்டும் 356 கிராமங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ள இந் நடவடிக்கையின் போது இதுவரை சுமார் 152 பேர் கைது செய்யப்பட்டதாக குருணாகல் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவர்களில் 108 பேர் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 44 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் தடை செய்யப்பட்ட என்.ரி.ஜே. எனப்படும் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் 8 பேரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment