சஹ்ரான் உள்ளிட்ட 3 தற்கொலையாளிகளின், அடையாளத்தை உறுதிப்படுத்த மரபணுச் சோதனை
ஈஸ்டர் ஞாயிறு நாளன்று கொழும்பில் மூன்று விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த, மரபணுச் சோதனைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷங்ரி-லா விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் காசிம் தொடர்பாக, தற்போது தடுப்புக்காவலில் உள்ள அவரது சகோதரியின் இரத்த மாதிரியைப் பயன்படுத்தி, சோதனை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிங்ஸ்பெரி விடுதியில் தாக்குதல் நடத்திய அப்துல்லா எனப்படும், மொகமட் அசாம் முகமட் முபாரக் தொடர்பான மரபணுப் பரிசோதனையை, அவரது மகளின் இரத்த மாதிரியைக் கொண்டு நடத்துமாறும், அரசாங்க பகுப்பாய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சினமன் கிரான்ட் விடுதியில் குண்டுத் தாக்குதல் நடத்திய இன்சாப் அகமட் தொடர்பாக, கொழும்பு-7, பிளவர் ரெரன்சில் வசிக்கும் அவரது தாயாரின் இரத்த மாதிரியைப் பயன்படுத்தி, மரபணுச் சோதனையை நடத்துமாறும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment