2 கிழமைக்குள் தீவிரவாதத்தை அழித்து முஸ்லிம்களுக்கு, ஆறுதலை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதிக்கு நன்றி
- பாறுக் ஷிஹான் -
சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சார்பாக நினைவுச்சின்னம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டுள்ளது.
இன்று( 08)கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்த வேளை குறித்த கௌரவம் வழங்கப்பட்டது.
கல்முனை மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம் றஹீப்பின் வரவேற்பு உரையுடன் 1000 இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் காலை 11.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றும் போது இலங்கையில் ஏற்பட்ட தீவிரவாதத்தை இரு கிழமைக்குள் அழித்து முஸ்லீம் மக்களுக்கு ஆறுதல் ஒன்றை பெற்றுக்கொடுத்தமைக்காக நன்றியை தெரிவிப்பதாக அங்கு குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஜனாதிபதியின் உரை இடம்பெற்றதை அடுத்து குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம் இளைஞர்கள் யுவதிகள் தங்களது ஆதங்கங்களை குறிப்பிட்டு தீர்வுகளை வழங்குமாறு கேட்டனர்.
தொடர்ந்து இளைஞர் யுவதிகளின் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி அதற்கு ஆக்கபூர்வமான பதில்களை வழங்கினார்.
இதனால் சபையில் இருந்த இளைஞர் யுவதிகள் எதிர்கால ஜனாதிபதி என கோஷம் எழுப்பினர்
அத்துடன் அநேக இளைஞர்கள் கேட்டுக்கொண்ட சாய்ந்தமருதிற்கான தனி சபை விடயத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாக அழுத்தி கூறியதை அடுத்து மேலும் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அத்துடன் தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதில் சாய்ந்தமருது மக்கள் அரசிற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்து விடைபெற்றார்.
மேலும் அதற்கு முன்னர் சாய்ந்தமருது பிரதேச செயலகம் கல்முனை மாநகரசபை முதல்வர் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல்இ கல்முனை பிராந்திய இளைஞர் சம்பளனங்கள்இ மற்றும் சிவில் அமைப்புகளின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்ட அரச முக்கிய உத்தியோகத்தர்களை சந்திக்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த இலங்கை ISIS பயங்கரவாதம் அழியாது.
ReplyDeleteதேடுதலுக்கு பயந்து தற்காலிகமாக அஅடங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் ஆளுனரை கௌரவிக்கவில்லையா?
ReplyDelete