Header Ads



நாட்டில் 2500 பள்ளிவாசல்களே உள்ளன: 9000 என்பது கட்டுக்கதை

நாட்டில் 9000இற்கும் அதிகமான பள்ளிவாசல்கள்இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பதிவுசெய்யப்பட்ட 2500பள்ளிவாசல்களே இலங்கையில் உள்ளன. 300வரையான பள்ளிவாசல்கள் பதிவுசெய்யப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.  

அலரிமாளிகையில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  அவர் மேலும் இங்கு தெரிவித்ததாவது,  

புர்கா மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் உட்பட சில தீவிரவாத அமைப்புகளை தடைசெய்யும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்ளே உள்ளது. அவசரகால சட்டத்தின்கீழ் அவை தடைசெய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் பாதுகாப்பு அமைச்சுதான் எடுக்கும்.  

9000ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம் விவகார அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட 2500பள்ளிகள் மாத்திரமே உள்ளன. 300பள்ளிகள்வரை பதிவுசெய்யப்படாமல் உள்ளன. பள்ளிவாசல்களின் நிதி விவரங்கள் தொடர்பில் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் விவகார அமைச்சுக்கு தகவல்களை அளிக்க வேண்டும்.  

முறையற்ற விதத்தில் நிதிகள் வந்திருந்தால் அல்லது செலவுகள் இடம்பெற்றிருந்தால் வழக்குத் தாக்கல் செய்யவும் முடியும். அவ்வாறான நடவடிக்கைகளும் கடந்தகாலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. அனுமதி இல்லாத பள்ளிகள் தொடர்பில் முஸ்லிம் விவகார அமைச்சுதான் தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்கள் நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை தொழ வேண்டும். நீண்ட தூரம் செல்ல முடியாது. ஆகவேதான் பள்ளிவாசல்கள் அருகில் கட்டப்பட்டுள்ளன. மத்ரசாக்களில் கற்பிக்கப்படும் பாடநெறி தொடர்பில் கண்காணித்து வருகின்றோம். அவை தொடர்பில் உரிய பொறிமுறையொன்றை கொண்டுவரவுள்ளோம் என்றார்.

No comments

Powered by Blogger.