Header Ads



றிசாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லாவை பதவிகளில் இருந்து நீக்க ஜனாதிபதிக்கு 24 மணி நேர காலக்கெடு

அமைச்சர் றிசார்ட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேர காலக்கெடுவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இந்த காலகெடுவுக்குள் இவர்களை பதவிகளில் இருந்து நீக்கவில்லை என்றால், பெரிய தீர்மானத்தை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு ராஜகிரியவில் உள்ள சதஹாம் செவன பௌத்த மத்திய நிலையத்தில் இன்று -28- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்குமாறு சாசன பாதுகாப்பு சபையின் செயலாளர்களான பௌத்த பிக்குமார் கையெழுத்திட்ட ஆவணத்தை கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தோம்.

இது சம்பந்தமாக ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்காது போனால், எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மத தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், படையினருடன் கலந்துரையாடி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

3 comments:

  1. Super
    Great News for all the peace loving Srilankans

    ReplyDelete
  2. இவ்வாறான தலைவர்களஇடமிருந்து வேறு எதை ஏதிர்பார்க்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.