200 இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை, நாட்டிலிருந்து வெளியேற்றம் - வீசாவை மட்டுப்படுத்தவும் தீர்மானம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் 200 இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் உட்பட 600 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மதகுருமார்கள் இலங்கைக்கு சட்டரீதியாக வந்துள்ளபோதும் தாக்குதல்களின் பின்னரான பாதுகாப்பு சூழலால் அவர்கள் வீசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அவர்களிடம் உரிய தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக உள்விவகார அமைச்சர் வஜிர அபயவர்தன தெரிவித்தார்.
"நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வீசா நடைமுறையை இறுக்கியிருப்பதுடன், மத ரீதியான போதகர்களுக்கு வழங்கும் வீசாவை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம்" என அவர் குறிப்பிட்டார். "நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 200 பேர் இஸ்லாமிய அறிஞர்களாகும்" எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை அமைச்சர் வெளிப்படுத்தாதபோதும், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் ஆகியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் வீசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்த நிலையில் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"நாட்டில் உள்ள பல மத நிறுவனங்கள் நீண்டகாலமாக வெளிநாட்டிலிருந்து மத போதகர்களை அழைத்துவருகின்றன. எனினும் அண்மைக் காலத்தில் காளான் போன்ற பல முளைத்துள்ளன.
அவை தொடர்பில் நாம் தற்பொழுது கவனம் செலுத்தியுள்ளோம்" என்றார். நாட்டுக்கு வரும் வெளிநாட்டு மதகுருமார் உள்ளூரில் உள்ளவர்களுக்கு அடிப்படைவாதக் கருத்துக்களை புகட்டி ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற தாக்குதல்களை நடத்த தூண்டலாம் என்ற அச்சம் அரசாங்கத்துக்குக் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே மாதிரி அரபி நாடுகளில் தொழில் செய்து கொண்டு இருக்கும் குறிப்பாக சிங்கள இனத்தவர்களை அங்கு இருந்து உடனடியாக விரட்ட அந்த நாடுகளில் எப்படியும் இருப்பார்களே அரசோடு தொடர்புடைய நம்நாட்டவர்கள் அவர்கள் பேசி அப்படி முடிவு செய்ய வேண்டும்.LTTE பயங்கரவாதிகளின் காலத்தில் தென் இந்தியா ஆட்சியாளர்கள் LTTE க்கு நேரடியாக உதவி செய்தார்கள் அப்படியெனில் ஏன் இந்தியர்களை அப்போது நாடுகடத்தவில்லை அன்றெய்க்கு.
ReplyDeleteYOU FORGOT ALSO labour Export to Arab countries? Should be banned also
ReplyDeleteஇந்த நாட்டில் மதராக்கள் இல்லை என்றால் ஒழுக்கங் கெட்ட தீவிரவாதிகள் உருவாகுவார்கள். அதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் வலுச்சேர்க்கும்.
ReplyDeleteமாறாக இங்குள்ள மதரசாக்களை ஒரு பொதுவான பாடத்திட்டத்திட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தி விரிவுயாளர்களுக்கு பயிற்சி அளித்து அரசு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ன என்ன வசதிகள் முஸ்லிம்களுக்கு இலங்கையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை ஒவ்வொன்றாக நீக்கும்போதாவது முஸ்லீம்கள் அறிந்து கொள்ளட்டும். வடக்கில் A9 வீதி திறந்துவிடப்பட்ட போது அப்பிரதேச இளையோர்கள் வெற்றிக்களிப்பில் இருந்தார்களாம் அவ்விடம் வந்த வயோதிபர்கள் சிறு வயதில் நாங்கள் ஓடி ஆடித்திரிந்த வீதி இது என்று சொன்னார்களாம். எதிர்காலத்தில் ஒரு பள்ளிவாசலை மதரசாவை அமைக்க அனுமதி கிடைத்தால் சந்தோஷத்தில் விழா எடுக்க வரும் எழுதி வைத்துகொள்ளுங்கள். அருமைத் தன்மை உள்ள போதுதான் ஒன்றின் பெறுமானம் புரியும். கருத்துரைகளைப் பார்க்கும் போது புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை. சிலருக்கு அடிக்கு மேல் அடி விழுந்தால் தான் புரியும். எல்லாம் இறைவன் செயல்.
ReplyDelete