மாறவிலயில் ஊரடங்குச் சட்டத்தை, மீறிய 15 பேர் கைது
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை மாறவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து 15 பேர் இன்று (14) நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக மாறவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாறவில, நாத்தாண்டி, மஹவெவ, ஹத்தினிய மற்றும் கட்டுனேரிய ஆகிய பிரதேசங்களிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாறவில பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியான இன்று காலை 8.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திற்குள்ளேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் மாறவில மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment