Header Ads



இனரீதியிலான அடக்குமுறை, 12 முஸ்லிம் ஆசிரியைகள் ஆசாத் சாலியினால் இடமாற்றம்


இன்று, -07- அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் 10 ஆசிரியைகள் உட்பட 12 முஸ்லிம் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் தலையிட்டும் கூட ஹிஜாப் அணிந்த ஆசிரியைகள் அங்கு வரத்தேவையில்லையென குறித்த குழுவினர் அடம் பிடித்த நிலையில், இரு ஆசிரியைகள் களுத்துறைக்கும் மற்றும் பாத்திமா கல்லூரி, சேர் ராசிக் பரீட் கல்லூரி, பதியுதீன் முஸ்லிம் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மாற்றங்களைப் பெற்றுள்ளனர்.

புவக்பிட்டி தமிழ் பாடசாலையின் நிர்வாகமும் இது தொடர்பில் சர்ச்சைக்குழுவுக்கு சார்பாக நடந்து கொண்ட நிலையிலேயே இவ்விவகாரம் ஆளுனர் அசாத் சாலியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுனர் ஆசாத் சாலி இச்சம்பவம் கவலை தருவதாகவும் ஏலவே தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தும் கூட இனரீதியிலான அடக்குமுறை உபயோகிக்கப்படுவது எதிர்காலத்தில் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்திற்கொண்டும் மேலதிக சர்ச்சைகளை தவிர்க்கும் முகமாகவும் இவ்வழியில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்

6 comments:

  1. Changing pillows for headache......

    ReplyDelete
  2. ஏன் இந்த பெண்களை குற்றவாளிகள் போன்று சுற்றி நிற்க வைத்துள்ளார்கள்?. அவர்களுக்கும் இருக்கைகள் கொடுத்தால் தான் என்ன?
    அநாகரிய அசாத் அலி!

    ReplyDelete
  3. Azad Sally you are not capable enough to handle this kind situation. You are changing the pillow for headaches. You should take legal action against this school administration.

    ReplyDelete
  4. முஸ்லிம் ஆசிரியர்கள் இந்த பன்றி கூட்டத்திற்கு தன்னுடைய சேவையை வழங்காமல் இருப்பதே நன்று.

    ReplyDelete
  5. What do you know about basic human rights? Why didn't you have a press briefing about this incident?

    ReplyDelete
  6. எமது முஸ்லிம் ஆளுநர் என்பதால் உடனே இடமாற்றம் கிடைத்தது இது ஒரு சில கயவர்களுக்கு விலங்குவது இல்லை இந்த பெணகளை நடு வீதியில் ஒரு சில இனவாதிகள் நிப்பாடி அவர்களை விரட்டும் போது இந்த பெண்களை இருக்க சொல்லும் எமது சமூக சிந்தனையாளர்கள் ஏங்கே போனார்கள்

    ReplyDelete

Powered by Blogger.