மகிந்தவுக்கும் சு.க. Mp க்களுக்கும் இன்று முக்கிய சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இன்று எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பாராளுமன்றக் குழு அறையில் வரவு - செலவு திட்டம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கந்துரையாடவுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் பின்னரே வரவு - செலவு திட்ட வாக்களிப்பு தொடர்பில் தீர்க்கமாக அறிவிக்கப்படும் என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இவ்வருடத்திற்கான வரவு - செலவு திட்ட ஆதரவு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
அந்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து வினவிய போதே தயாசிறி இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment