இப்போதாவது இந்த ISIS யாரென புரிந்து கொள்ளுங்கள்...!
-நஜீப் பின் கபூர்-
வரலாறு நெடுகிலும் சமூகங்கள் தேசங்கள் அவ்வப்போது நெருக்கடிக்கு ஆளாகி வந்திருக்கின்றன. இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இலட்சக் கணக்கான உயிர்கள் ஒரே நேரத்தில் பலிபோய் இருக்கின்றன. இரு உலகப் போர்களிலும் அப்படி நடந்திருக்கின்றன.
நாம் வாழ்கின்ற நாடும் இப்படிப் பேரழிவுகளைச் சந்தித்திருக்கின்றன. இவை சுனாமி, சூறாவளி, வெள்ளம் என்ற பேரில் அவை நடந்திருக்கின்றன. எமக்குத் தெரிந்த அண்மைக்கால அரசியல் செயல்பாடுகள் காரணமாக பல ஆயிரம் ஆயிரம் உயிர்கள் கிளர்ச்சி, போர் என்ற பேரில் காவுகொள்ளப்படடிருக்கின்றன.
1971ல் தமது கொள்கைக்கு ஏற்ப ஒரு அரசை இங்கு நிறுவுவதற்கு சிங்கள இளஞைர்கள் முயன்று அதில் ஏற்பட்ட மோதலில் 10000 க்கும் 20000 க்கும் இடைப்படவர்கள் கொல்லப்படடிருக்கின்றார்கள். திரும்பவும் 1988-1990 களில் அரசுடன் மீண்டும் மோதி 20000 முதல் 25000 வரையிலான உறுப்பினர்களை பலியாக்கிக் கொண்டார்கள். இன்று அவர்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பி ஜேவிபி என்ற பெயரில் நாட்டில் அரசியல் செய்து வருகின்றனர்.
2009 வரை கிட்டத்தட்ட 30 வருடங்கள் தனி ஈழம் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடாத்தினார்கள். இதில் அரச படைத்தரப்பு போராட்டக்காரர்கள் பொது மக்கள் என்று பல இலட்சம் பேர் பலிபோய் இருக்கின்றார்கள். இலட்சக் கணக்கானவர்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் இன்றும் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
தமது போராட்டங்களில் உயிர் நீத்தவர்களை சிங்கள தமிழ் தரப்பினரும் இன்று உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.
சிங்கள இளைஞர்களும் தமிழ் விடுதலைப் போராட்டக்காரர்களின் செயல்பாடுகளுக்குமிடையே ஏதோ ஒருவகையில் ஏற்றுகொள்ளக் கூடிய காரணங்கள் இருந்தன என்று சொல்ல முடியும். ஆனால் இன்று முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்திருக்கின்ற இந்த அட்டூழியங்களை மனித சமூகம் எப்படி ஏற்றுக் கொள்வது இதற்கு என்ன நியாயத்தைச் சொல்வது.
நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு முஸ்லிமும் இந்த தாக்குதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அவர்கள் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டிக்கின்றோம், நிராகரிக்கின்றறோம் என்று ஓரிரு வார்த்தைகளினால் சொல்லிவிட்டு தமது பணி முடிந்து விட்டது என்று கூறிவிட முடியாது என்பது எமது வாதம்.
சமூக ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தனிமனிதன் என்ற வகையிலும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் கடமையும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கின்றது என்பதனை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு நாம் தெரிவிக்கின்ற சில கருத்தக்கள் பாவிக்கின்ற வார்த்தைகள் சிலவேளை கசப்பாக அதனை ஊடகங்கள் கூட உள்வாங்கிக் கொள்ள தயக்கம் காட்டக் கூடும். ஆனால் உளத்தூய்மையுடன் சமூகத்தின் நலன் கருதி சில விடயங்களை; சுட்டிக் காட்ட வேண்டி இருக்கின்றது.
இந்த ஐஎஸ்ஐஎஸ் விடயத்தில் நாடும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் பொறுப்பில்லாம் இதுவரை நடந்து வந்திருக்கின்றன. அவர்களின் உண்மையான உருவம் இப்போது பகிரங்கமாகி இருக்கின்றது. இந்தக் காட்டு மிராண்டிகள் மனித குண்டுகளினால் தனது கொள்கை முஸ்லிம்கள் மத்தியில் பரப்ப முனைந்து வருகின்றார்கள். இவர்கள் செய்த வேலையால் முஸ்லிம்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை இன்று உருவாகி இருக்கின்றது.
இப்போது முஸ்லிம்கள் தரப்பில் இது விடயத்தில் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அப்படி செயல்படுகின்றபோது ஒரு அரசியல், சமூக ஆய்வாளன் என்ற வகையில் இங்கு சொல்லப்படுகின்ற கருத்துக்கள் பற்றியும் சற்று அவதானம் செலுத்துமாறு பெறுப்பு வாய்ந்தவர்களிடம் சமூகத்தின் பேரால் கேட்டுக் கொள்கின்றேன்.
சமூகப் பொறுப்பு
1.இந்த சம்பவம் முஸ்லிம் பெயர்தாங்கிய பாவிகளால் நடாத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் அவர்கள் முஸ்லிம் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கின்றார்கள். எனவே ஒரு கௌரவப் பிரச்சிiனையாகக் கருதாது இதற்கு முழு சமூகத்தின் சார்பிலும் பொறுப்பு வாய்ந்தவர்கள் பகிரங்க மன்னிப்புக் கோரல்.
2.பாதிக்கப்படவர்களுக்கு சந்தர்பவாதத்திற்காக அனுதாபங்களையும் நேசக்கரத்தையும் நீட்டாது தொடர்ச்சியாக இது விடயத்தில் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும்.
3.எதனையும் மூடிமறைக்க முயற்சிக்காது தூய்மையுடன் இது தொடர்பாக தமக்குத் தெரிந்த தகவல்களை பாதுகாப்புத் தரப்புக்கு கொடுத்து ஒத்துழைத்தல்.
4.அறிவுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் கையால்தல்.
5.சமூகத்தை தெளிவுபடுத்தல்
6.திறந்த மனதுடன் பேச வேண்டும்
7.தமது செயல்படுகளில் தூய்மையைப் பேனுதல்
8.நடுநிலையான அனுமுறை
9.சமூகத்திலுள்ள முரண்பாடான குழுக்களை பலிதீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்மாக இதனைப்பாவிக்காது பொது எதிரியை இலக்காக் கொண்டு ஐக்கியப்பட்டுத் பொறுப்பான தீர்மானங்களை எடுத்தல்.
10.திறந்த மனதுடன் தமக்குள் கருத்துக்களை முன்வைத்தல்.
11.கேலிக்கிடமான நடவடிக்கைகளைத் தவிர்த்தல்
12.பொது எதிரிளை இனம் காண்பது.
13.இளைஞர்களை கட்டுப்பாட்டில் வைத்தால் அவர்களின் செயல்பாடுகளில் அவதானத்தைக் கடைப்பிடித்தல்.
14.பிரதேசத்தைக் கண்கானிப்பில் வைத்திருத்தல்
15.அரசியல் சமூக செயல்பாடுகளில் துரோகிகளின் நுழைவை சம்பூரணமாகத் தடுத்தல்.
16.மதப் பிரசாரங்கங்களை பகிரங்கமாக ஒலிபரப்புகின்ற போது அதில் சொல்லப்படுகின்ற தகவல்களில் செய்திகளில் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுதல். இஸ்லாத்தை கற்பனைக் கதைகளையும் பிழையான தகவல்களையும் கொடுத்து இலக்கியமாக்கி அதனை மக்கள் மயப்படுத்த வேண்டாம். பிரசமூகத்தினர் மனதை நோகடிக்கின்ற வார்த்தைகளை சம்பூரணமாக தவிர்த்தல்.
16.பிரச்சினைகள் பற்றி பேசுகின்ற கூட்டங்களில் கலந்துரையாடல்களில் தலைப்பிற்கு வெளியே பேசி காலத்தை வீணடிக்காதீர்கள். இது கடந்த காலங்களில் முஸ்லிம் சமூக அமைப்பில் காணப்பட்ட ஒரு குறைபாடாக இருந்து வந்திருக்கின்றது.
Very good requests but no one in Muslims or Tamils, you must love the nation First
ReplyDelete