அதாவுல்லாவின் கருத்து ISIS இன், அறிவிப்புக்கு ஒப்பானது - கோபத்துடன் பாய்ந்த ரணில்
-sivarajah-
“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இலங்கை ஜனாதிபதி யார் என்பது தெரியாதா? நாட்டுத் தலைவர் மைத்ரிபால தானே ? ஆனால் அவர் பிரதமர் ரணிலுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இதனை நான் கண்டிக்கிறேன். பிரதமர் ரணிலும் என்னிடம் பேசாமல் மைத்திரியுடன் பேசுமாறு சொல்லியிருக்க வேண்டும். நாட்டுத் தலைவர் ஒருவரை நீங்கள் அவமதித்துள்ளீர்கள்…”
இவ்வாறு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கட்சித் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ரணில் மீது கடும் விமர்சனத்தை வெளியிட்டார் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா.
“ சரி அவர் தான் அப்படி செய்தார் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்.? நாட்டின் தலைவர் ஜனாதிபதி மைத்ரி தான் அதனை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்..” என்றும் ரணிலை சாடிய அதாவுல்லா – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரணிலிடம் தொலைபேசியில் பேசியதை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் “ உமது கருத்து ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவிப்பு..” என்று திருப்பி கோபத்துடன் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது .
இங்கு பேசிய அமைச்சர் மனோ கணேசன் – ஒரு அமைச்சராக இருப்பதற்கே வெட்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் – இதன் பொறுப்பை ஆளுக்காள் சுமத்திக்கொண்டிருக்காமல் உண்மையை ஏற்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்கவேண்டுமென விமல் வீரவன்ச எம் பி இங்கு தெரிவித்துள்ளார்.
சம்பவங்கள் தொடர்பில் எந்த முன்னெச்சரிக்கைகளும் பாதுகாப்பு தரப்பில் வழங்கப்படவில்லையென இங்கு ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Childish thinking from a Muslim MP. Politically corrupt minds...
ReplyDelete