சகல தவ்ஹீத் அமைப்புக்களுக்கும், பாதுகாப்பு வழங்க - பிரதி பொலிஸ்மா அதிபருடனான சந்திப்பில் CTJ
நாட்டின் தற்போதைய சூழல் தொடர்பிலும், நாட்டில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் அமைப்புகள் தொடர்பில் விளக்கம் அளிக்கும் முகமாகவும் இன்றைய தினம் (25.04.2019) சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பதில் பிரதி பொலிஸ்மா அதிபருடன், பொலிஸ் தலைமையகத்தில் விசேட சந்திப்பு நடத்தப்பட்டது.
தவ்ஹீத் ஜமாஅத் - என்றால் என்ன? தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் இயங்கும் அமைப்புகளின் பணிகள் என்ன என்பது பற்றியெல்லாம் குறித்த சந்திப்பில் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டதுடன்,
குறித்த சந்திப்பில், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ), SLTJ, ACTJ, UTJ போன்ற தவ்ஹீத் அமைப்புகள் மற்றும் உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகள் என யாரும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை என்பதை தெளிவாக எடுத்துக் கூறியதுடன், உள்நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான எதிர் பிரச்சாரங்களை தவ்ஹீத் அமைப்புகளே முன்னெடுத்து வருகின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.
அத்துடன், இலங்கையில் இடம் பெற்றுள்ள தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ள ISIS இயக்கத்தின் முக்கியஸ்தரான ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் பற்றி முற்கூட்டியே சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) மூலம் பாதுகாப்பு பிரிவினருக்கு எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியதுடன், தவ்ஹீத் அமைப்புகளே இலங்கையில் அதிகமான அளவு சமுதாயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன என்றும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டது.
ஸஹ்ரான் ஹாஷிம் என்பவனுக்கும் தவ்ஹீத் அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதுடன், எந்தவொரு இஸ்லாமிய அமைப்புக்கும் ஸஹ்ரான் ஹாஷிம் என்பவருடன் தொடர்புகள் இல்லையென்பது எடுத்துக் கூறப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் ISIS இயக்கத்திற்கு எதிராகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) மற்றும் SLTJ, ACTJ, UTJ போன்ற உள்ளுர் அமைப்புகளும் கடும் எதிர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதினால், ISIS பயங்கரவாதிகள் குறித்த அமைப்புகளையும் இலக்கு வைக்கக் கூடும் என்கிற காரணத்தினால் அனைத்து தவ்ஹீத் அமைப்புகள் மற்றும் பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் எதிர்வரும் சில நாட்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.
ஊடகப் பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
என்ன மானாக்கு ஒங்களுக்கு ஒரு பாதுகாப்பு
ReplyDeleteஎல்லோரும் சேர்ந்து கஷ்ட்டப்படுவோம்
நல்ல இருந்த நாடு இப்படியா மாறினதுக்கு முக்கிய காரணம் ஒங்குட இந்த சின்ன சின்ன குழுக்கள்தான்
ஒங்குட நடவடிக்கைகளாலதான் அந்நிய மக்கள் முஸ்லிம்களை வித்தியாசமா பாக்க துவங்கினதும் இவ்வளவு பெரிய பிரச்சினைகளுக்கும் .
எல்லா அமைப்புக்களையும் ரத்து செய்து இலங்கை முஸ்லிம்கள் என்கின்ற ஒரு அமைப்புக்கு வரணும்.
கூட்டி கழிச்சி பாத்தா ஒங்குட ஒவ்வொரு குழுவிலயும் ஒரு 5000 பேர் இருப்பாங்களா ???
அல்லாஹ் உள்ளத்தை பாத்துதான் சுவர்க்கம் தருவானே ஒழிய வெளி தோற்றம், நடவடிக்கைகளை பாத்து இல்ல........
என்ன இருக்கோ இல்லையோ, 72 கூட்ட்டமும் நம்முட நாட்டுக்குள்ளேயே ..........
As a Sri Lankan and Muslim, all these so called groups must be banned in Sri Lanka with immidiate effect. inaddition all the members these groups must be arrested and investigated along with speaches made by each and every individual.
ReplyDeleteThese kind of groups are not required for Islam or Sri Lanka.
Sri Lankan muslims have more than 1000 years of history as loyal, trustworthy,patriotic and peace loving society.
After initiation of such groups , I personally found and felt how their preaching and teaching made just society to think how they are different from othey religions and coomunity.
I request.all Sri Lankan muslim who think and want them and their kids to be let.lived in Sr Lanka to raise their voice agiainst all these groups and help Sri Lankan Government to take immidiate and stern action to banned theses groups and arrest all its members.
ஒரு தவ்ஹீத் அமைப்பாக இலங்கையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு,பின் சில சில வருடங்களில் 5 ஆக பிரிந்து நீங்கள் காட்டிய விளையாட்டுக்கல்தான்.மாற்று மதத்தினரின் துவேச இனவாத தாக்குதல்கள் கடந்த காலங்களில் அதிகமானதுக்கு காரணம்.இனியும் உங்கள் 5% மாணவர்களுக்காக 95% மான Muslim களை பலிகொடுக்க முடியாது.வீதியில் போவதக்கு வெட்கமாக உள்ளது.இத்தனை குழுக்களா உங்களுக்கும் என அவர்கள் கேட்கும் போது பதில் சொல்ல முடியாமல் தடுமார வேண்டிய நிலை.நீங்கள் நிச்சயமாக தடை செய்யப்படவேண்டும்.உங்களின் இயக்க ஆரம்பம் அதன் பிறகு Muslim இனத்தினரிடையே ஏற்பட்ட சண்டைகள்தான் அடுத்தவர்கலுக்கு எம்மை காட்டிக்கொடுத்தது
ReplyDeleteAll thawheed jamath should banned and their sources of fund stopped if srilankan want to live in peace and harmony.
ReplyDeleteநீங்கள் அனைவரும் ஒரே ஒரு அமைப்பினை பிரதிநிதித்துவம் செய்திருந்தால் எவ்வளவு மகிழ்சியாக இருந்திருக்கும்
ReplyDeleteநாம் பல துண்டுகளாக கிழிக்க்கப்பட்ட ரொட்டித்துண்டுகளாக அல்லவா இருக்கின்றோம்.
சஹ்ரான் என்பவனி
ReplyDeleteன் அடிப்படை தௌ
ஹீத் ஜமாஅத்தின்
பாசறையும் போதனை
யும்தான். நீங்கள்
உங்களுக்குள்ளான
சீர்திருத்தத்தைவிட
அல்லது உங்கள்
கொள்கையை பரை
சாற்றுவதைத்தவிர்த்
து பிறரின் வழிமுறை
களில் தீவிரகுழப்பத்
தை ஏற்படுத்துகின்ற
வர்கள்.உங்கள் அனை
வர்மீதான சந்தேக
த்தின் ஆரம்பம் இங்கு
தான் ஆரம்பமாகின்
றது.
சமூகப்பணி ஒன்றை
காரணம் காட்டி நாம்
நல்லவர்கள் எனக்கூற
முன்வருவது தவறு.
உலகில் கலகத்தை
ஏற்படுத்தும் நாடுகளு
ம் அமைப்புக்களும்
தங்களது ஜனரஞ்சக
ஊடகமாக அதைத்தா
ன் செய்கின்றன.
SHOULD NOT GIVE ANYTHING FOR THESE BUGGERS
ReplyDeleteஅ.இ.ஜ.உ.சபைக்கு கட்டுப்படாத அனைத்து அமைப்புகளையும் தடை செய்ய மக்கள் போராட்டம் செய்ய வேண்டும்.
ReplyDelete