Header Ads



பேஸ்புக்கில் படித்த கதையை, பாராளுமன்றத்தில் கூறி சாபமிட்ட வீரவன்ச

முகப்புத்தகதில் வாசித்த கதை ஒன்றினை எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று பாராளுமன்றத்தில் கூறினார். கதையைக்கூறி ஆட்சியாளர்களை சாபமிட்டார். 

"முகப்புத்தகத்தில் நல்ல கதை ஒன்று படித்தேன், அந்தக் கதையில் ரஸ்சிய ஜனாதிபதி புடினும், இங்கிலாந்து பிரதமரும், எமது நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமாக மூன்று பேரும் நரகத்துக்கு செல்கின்றனர்.

அங்கு சென்றதும் ஜனாதிபதி புட்டின் ரஷ்யாவிற்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுக்கின்றார். ஒரு மணிநேரம் பேசுகின்றார் அதற்கான 60 மில்லியன் டொலர் அறவிடப்படுகின்றது. 

அதன் பின்னர் இங்கிலாந்து பிரதமரும் அந்நாட்டுக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுக்கின்றார்.அரைமணிநேரம் பேசுகின்றார். அவருக்கும் அதேபோல் பல மில்லியன் அறவிடப்படுகின்றது.

இறுதியாக எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இலங்கைக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுக்கின்றார்.அவர் நான்கு மணிநேரம் பேசுகின்றார்.ஆனால் அவருக்கு மில்லியன் ரூபாய்கள் அறவிடப்படவில்லை.

மாறாக 6 டொலர் மட்டுமே அறவிடப்படுகின்றது.அப்போது ஏனைய இருவரும் கேள்வி எழுப்புகின்றனர். 

நாங்கள் பேசினோம் இவ்வளவு மில்லியன் பணம் அறவிடீர்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மட்டும் ஏன் இவளவு சலுகை கொடுத்தீர்கள் என்கிறனர். 

அப்போது நரகத்தில் கூறியது என்னவென்றால், ரணில் ஆட்சி செய்த காலத்தில் இலங்கையை நரகத்தின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டார். ஆகவே இந்த தொலைபேசி அழைப்பு உள்நாட்டு அழைப்பு, சர்வதேச அழைப்பு அல்ல என்றார்கலாம். அவ்வாறான ஒரு மோசமான நிலைமைக்கு இன்று நாடு தள்ளப்பட்டுவிட்டது. ஆகவே இந்த நிலைமைக்கு நாட்டினை கொண்டுசென்ற நபர்களை சபிக்கின்றேன் என்றார். 

1 comment:

  1. Thank you wimal for going to hell before Putin, May and Ranil, watched the entire seane live, came back to SL and told us the story.

    ReplyDelete

Powered by Blogger.