Header Ads



குண்டு வெடிப்பிற்கும், ரிஷாத் பதியுதினுக்கும் - எஸ்.பி. குற்றச்சாட்டு

(எம்.மனோசித்ரா)

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கும் தொடர்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் மொஹமட் இப்ராஹிம் பாரிய வணிகர் ஆவார். அவருடன் ரிஷாத் பதியூதினின் தம்பி இணைந்து வணிக நடவடிக்கைககள் பலவற்றை முன்னெடுத்துள்ளார். 

முன்னான் ஜனாதிபதி சந்திரிகா மீதான குண்டு தாக்குதல் முயற்சியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரொருவர் இவரது உறவினராவார். அத்தோடு மன்னார் பிரதேசத்தில் சுமார் 3000 ஏக்கர் காணி ரிஷாத் பதியூதீன் மற்றும் அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளவாசல்களை புனரமைப்பதற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதி கொல்லையிப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் மீது முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் அலுவலகத்தில் இன்று -25- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.