மலிக் வீட்டில் விருந்துபசாரம் - மைத்திரி + ரணிலை மீண்டும் இணைக்க முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை மீண்டும் இணைக்கும் முயற்சியில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய கண்டியில் மலிக் சமரவிக்ரமவின் வீட்டில் விருந்துபசாரம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அளுத்கமகே, ஜனாதிபதியும் பிரதமரும் மீண்டும் எந்த சந்தர்ப்பதிலும் இணைய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment