Header Ads



கைது செய்யப்பட்ட எகிப்து நாட்டு, அரபுமொழி ஆசிரியர் விடுதலை

வீசா நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்ட மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் கடமையாற்றுகின்ற எகிப்து நாட்டு அரபுமொழி ஆசிரியர் இன்று (26) நண்பகல் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பான சகல சட்ட ரீதியான ஆவணங்களையும் சமர்ப்பித்ததன் பின்னர், நீதிமன்றம் இவரை இன்று விடுதலை செய்ததாக அக்கல்லூரியின் நிருவாகச் செயலாளர் அஷ்ஷெய்க் நவ்ஸர் (இஸ்லாஹி) தெரிவித்தார்.

இதேவேளை> அரபுக் கல்லூரி வளாகத்திலிருந்து பொலிஸாரினால் நேற்று முன்தினம் (24) எடுத்துச் செல்லப்பட்ட மாதம்பை நபர் ஒருவருக்கு சொந்தமான வாகனமும் உரிமையாளரின் அத்தாட்சிகளை உறுதிப்படுத்தியதன் பின்னர், பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

இவ்வியடமாக எதுவித தகவல்களும் எம்மிடமோ அல்லது சம்மந்தப்பட்ட எவரிடமும் பெறாமல் ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்பட்டு பொதுமக்களைப் பிழையாக வழிநடாத்தும் வகையில் செய்திகளைப் பரப்பியமையினை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும்; இத்தகைய செயல்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டிக் கொண்டார்;.

As Sheikh A.A.M. Saadiq Islahi, BA (Cey), MBA (UK) 
Manager,
ISLAHIYYAH ARABIC COLLEGE,

1 comment:

  1. மஸஹல்லாஹ் நல்ல செய்திகள் தான் ஒருசிலரின் தீய நடத்தைகளால் தற்போதைய சூழ்நிலையில் நல்லமனிதர்களும் பாதிப்படைகிறார்கள் அல்லாஹ்தான் எல்லோரையும் இந்த சூழ்நிலையில் இருந்து எங்களை அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.