Header Ads



வெலே சுதாவின் மரண தண்டனை, மீண்டும் உறுதி செய்யப்பட்டது

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால்  இன்று  -05-வெள்ளிக்கிமை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அசல வெங்கப்புலி மற்றும் தீபாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் குழாம் தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளனர். 

2008 ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் வைத்து 07.05 கிராம் போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக வெலே சுதாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

வெலே சுதாவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.