பெண் பொலிஸாரினால் வெற்றிகரமாக, தடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி
ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை, பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி, தடுத்து நிறுத்திய சம்பவம் இன்றும் (04) இடம்பெற்றுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச பொறியியலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம், புறக்கோட்டை ரயில் நிலையத்திலிரந்து, ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்ற போதே, வீதி தடைகளை ஏற்படுத்தி, பெண் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னோக்கிச் செல்லவிடாது, தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இதற்கு முன்னரும் இவ்வாறான முயற்சியில், பெண் பொலிஸார் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment