தற்போதைய காலமே எனது, அரசியல் வரலாற்றில் பொற்காலம் - விஜித் விஜயமுனி சொய்சா
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பெருந்தொகையான உறுப்பினர்கள் தன்னுடன் எந்த கட்சியிலும் இணைய தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஊவா வெல்லஸ்ச பிரதேசத்திற்கு சேவைகளை செய்யும் முன்னணியில் நான் இணைவேன். ஆனால், அதனை இன்னும் தீர்மானிக்கவில்லை. “அப்பா இறந்து போனார்”(அப்பச்சி மலா) என்று கூறியும் எனக்கு கடந்த பொதுத் தேர்தலில் 38 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அவற்றில் 15 ஆயிரம் வாக்குகள் என்னுடைய தனிப்பட்ட வாக்காளர்களின் வாக்குகள். தன்னுடன் 80 முதல் 90 வீதமான வாக்காளர்கள் இருக்கின்றனர்.
நான் செல்லும் இடத்திற்கு வருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தயாராக இருக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்களுடன் எங்களுடன் இணைந்து வருகின்றனர்.
தற்போதைய காலமே எனது அரசியல் வரலாற்றில் பொற்காலம். நான் எடுத்த தீர்மானம் சரியானது என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
கள்ள தீண் இப்ப தான் நிறைய கிடைக்குது போல.....
ReplyDelete