சஹ்ரான் உயிரோடில்லை, உறுதிப்படுத்தினார் மைத்திரிபால
முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்கவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை மக்களை முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக பார்க்கவேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்
ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடனான சந்திப்பின்போது சிறிசேன தெரிவித்துள்ளார்
பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்பு செயலாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்டனர் என குறிப்பிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்வார் என கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்களிற்கும் புலனாய்வுதுறையை பலவீனப்படுத்தியதற்கும் அரசாங்கமே காரணம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்
ஹோட்டல் சங்கிரிலாவில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட இருவர்களில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமும் ஒருவர் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்
Post a Comment