Header Ads



"இறைவன் உலகத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே, படைத்திருப்பதாக சஹ்ரான் கூறுவார்"

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹசீம், தாக்குதல் சம்பவங்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தமது குடும்பத்தினருடன் தலைமறைவானதாக அவரது சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹசீமின் சகோதரியான மொஹமட் ஹசீம் மதானியா வெளிநாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்றிடம் இதனை கூறியுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி காத்தான்குடியில் உள்ள வீட்டுக்கு சென்றேன். பெற்றோருக்கு உணவு கொடுப்பதற்காக அங்கு சென்றிருந்தேன்.

எனினும் வீட்டில் எனது, தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் மற்றும் சஹரான் ஹசீமின் குடும்பத்தினர் எவரும் இருக்கவில்லை. அதன் பின்னர் அவர்கள் காணாமல் போயிருந்தனர். கடந்த 18 ஆம் திகதியில் இது அவர்கள் பற்றி எந்த தகவலும் எமக்கு கிடைக்கவில்லை.

இறைவன் உலகத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே படைத்திருப்பதாக சஹரான் கூறுவார். அவரது பல கொள்கைகளுடன் எனது கணவர் இணங்கவில்லை. இதனால், எமது குடும்பம் சஹரான் ஹசீம் குடும்பத்துடனான தொடர்புகளை துண்டித்துக்கொண்டது எனவும் மதானியா தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Bloody Barbarian,this is Jahiliyyah and Brahman feeling.Islam emphasized Universal Unity and teach to respect other human being.Not only this man but also other Controversial figures such as Abdulla Pahilvan and Abdul Rauf Moulavie are product of Kathankudy.

    ReplyDelete

Powered by Blogger.