ஜனாதிபதி மீண்டும் ஒரு, அரசியல் நாடகத்தை அரங்கேற்றக்கூடாது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரவு - செலவு திட்டம் குறித்து எந்த கருத்தினையும் முன்வைக்காது மௌனம் காப்பது ஏன் என ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது பேசிய அவர்,
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக அரசாங்கமென்ற ஒன்றை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரவு - செலவு திட்டம் குறித்து எந்த கருத்தினையும் முன்வைக்காது மௌனம் காப்பது ஏன்?
ஜனாதிபதி மீண்டும் ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றி தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்காமல், வரவு - செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிரானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.
Post a Comment