ஷரீ ஆ சட்டம், காட்டுமிராண்டிகளுக்கானதுதான்...!
சட்டவியலை சட்டத்திற்கான தத்துவத்தை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
சட்டம் என்பது மனிதர்களை வதைப்பதற்குரிய ஆயுதம் அல்ல.
மனிதனாக மாறிய பின்பு மீண்டும் மிருகமாகிடக் கூடாது என்பதற்கான பாதுகாப்பு தான் சட்டம்.
மடமையிலிருந்து மீண்ட பிறகு விலங்காடியாக திரிந்த கீழ்மைகளை விட்டொழித்து மனிதனாக மாறியவன் மீண்டும் இச்சைக்கு ஆட்பட்டு மிருகமாகவோ அதை விட தாழ்ந்தவனாகவோ மாறி சமுகத்தை சீரழிக்கும் காட்டுமிராண்டியாகாது தடுத்து மனிதனாக்க தான் ஷரீ ஆ!
ஆதலால் ஒப்புக் கொள்கிறேன் ஷரீ ஆ காட்டுமிராண்டிகளுக்கு தான்.
பாலின உறவு என்பது வெறும் ஆசைக்கான வடிகால் அல்ல!
அடுத்த சந்ததிகளை உருவாக்கும் மனித இன விருத்திக்கான ஒரே வாய்ப்பாடு.
மனிதகுல மேம்பாட்டிற்கான சூத்திரம்.
குழந்தை பிறந்தால் போதும் என எண்ணினால் குடும்பம் நாசமாகி விடும்.
குழந்தைக்கான பொறுப்பை சுமக்கும் பெற்றோர்கள் வேண்டும்.
குழந்தையின் பலஹீனம் நீங்கி பலம் பெறும் வரை!
பலம் பெற்ற பின்பும் வழிகாட்டும் நிதானம் கொண்ட கடமையாய் கருதி பொறுப்பை நிறைவேற்றும் பெற்றோர் வேண்டும்.
அந்த பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்த மேற்குலகம் ஒரு தீரா சாபம்!
Single parenting எனும் ஒற்றை பெற்றோரியலை அதை அனுபவித்தவர்களிடம் கேட்டால் தெரியும் அதன் வலியும் வேதனையும்.
வீட்டிற்குள்ளும் வெளியேயும் படும் அவதி அதனால் ஏற்படும் மன உளச்சல்.
பல குழந்தைகளின் முரட்டு சுபாவத்திற்கும் வரைமுறையற்ற செயலுக்கும் ஒற்றை பெற்றோரியலுக்கும் நிறைய தொடர்பு உண்டு.
இந்த குழந்தைகள் தான் தன்பாலின உறவுக்கு பலியாகிறார்கள்.
இதுபோன்று கண்காணிப்பற்ற பதின்ம வயது hostel வாழ்க்கை!
இது தவறு குற்றம் என்ற மனநிலை அவர்களுக்கு உருவாவதில்லை.
வீட்டில் தனித்த தன் தாயோ/தந்தையோ இப்படி தான் இயங்குகிறார்கள் என்பதை கண்டு வளர்ந்திருப்பார்கள்.
இதுதான் மேற்குலகின் பாலின தொடர்பில் உருவான வரைமுறையற்ற தீமைகளின் தொடக்கம்.
அதை தான் இந்தக் கட்டுரையிலும் ஒருவர் கண்டிக்கிறேன் என வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது தோன்றும் ஆசைக்கான வடிகால்.
பாலின உறவு என்பது வெறும் ஆசைக்கான வடிகாலல்ல!
சமுக பொறுப்புணர்ந்து செயல்படும் மனிதமேம்பாட்டு திட்டம்.
அதை ஒருவன்/ஒருத்தி சீரழிக்கிறார்கள் எனில் அது சாதாரண குற்றமல்ல.
ஹ
திட்டமிடப்பட்ட சட்ட ஒழுங்குகளுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனம்.
அந்த காட்டுமிராண்டிகளை நேர்படுத்த தான் இந்த ஷரீ ஆ சட்டம்.
- செய்யத் முஹம்மத் புஹாரி
Beautiful explained
ReplyDelete