Header Ads



இலங்கைத் தாக்குதலில் உயிரிழந்த சவுதி, உத்தியோகத்தர்களின் ஜனாசாக்கள் அனுப்பி வைப்பு


கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த சவுதி அரேபிய விமான சேவை உத்தியோகத்தர்கள் இருவரின் சடலங்கள் அந்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சவுதி அரேபிய விமான சேவையின் முகாமையாளர் அஹமட் செயின் ஜஃபாரி மற்றும் விமான சேவை ஊழியர் ஹனி மாகட் ஒத்மான் ஆகியோர் ஹோட்டல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தனர்.

தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவரான ஹாஜர் அசீஸ் இன்று தனது நாட்டிற்குத் திரும்பினார்.

அவர் நாடு திரும்பியபோது பிள்ளைகள் அவரை அரவணைத்த காட்சிகள் சில வௌிநாட்டு ஊடகங்களில் வௌியிடப்பட்டுள்ளன.

அதன் பின்னர் அவர் அந்நாட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் சவுதி அரேபிய விமான சேவை பணிப்பாளர் நாயகம் சாலே பின் நாசர் அல் ஜாசர் உயிரிழந்த ஊழியர்கள் இருவரினதும் சேவையை கௌரவப்படுத்தியதுடன், அவர்கள் விமான சேவைக்கும் சவுதி அரசாங்கத்திற்கும் உயரிய சேவையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Innalilahe va inna ilahe rajeiyun.

    ReplyDelete
  2. எமது தார்மீக அனுதா
    பங்கள்...

    ReplyDelete
  3. எமது தார்மீக அனுதா
    பங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.