எந்த தேர்தல் குறித்தும், கடவுள் ஒருவருக்கே தெரியும் - மகிந்த
நாட்டின் மாகாண சபை உள்ளிட்ட எந்த தேர்தல் குறித்தும் கடவுள் ஒருவருக்கே தெரியும் என எதிர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செய்தி ஊடக தலைமை ஆசிரியர்களை சந்தித்து மகிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியிருந்தார். இதன்போது தற்போதை அரசியல் சிக்கல்கள் மற்றும் தேர்தல் தொடர்பிலும் பேசினார்.
நாட்டின் மாகாண சபை உள்ளிட்ட எந்த தேர்தல் குறித்தும் கடவுள் ஒருவருக்கே தெரியும், அது குறித்து ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ தெரியாது.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமையும், கடந்த வாரம் நாடாளுமன்றில் உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்கான ஒதுக்கம் தோற்கடிக்கப்பட்டமைக்கான ஒரு காரணம்.
இதேவேளை, புதிதாக முன்வைக்கப்படவுள்ள தீவிரவாத எதிர்ப்பு சட்ட மூலம் மிகவும் பாரதூரமானது.
தற்போது அவசரகால சட்ட பிரகடனத்தின் ஊடாக வலுப்பெறுகின்ற பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துகளை, நிரந்தரமாக சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த சரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தையும் தீவிரவாத வரையறைக்குள் உட்படுத்தி அவற்றை அச்சுறுத்தவும் வழி செய்யப்பட்டிருக்கின்றன.
இதுதோற்கடிக்கப்பட வேண்டும். இதுகுறித்து ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment