இஸ்லாமிய கல்வி என்ற பெயரில், தற்கொலை குண்டுதாரிகள் தயாரிப்பு - மத்ரஸாக்கள் பெளத்தர்களுக்கு எதிராக செயற்படுகின்றன
இஸ்லாமிய சர்வதேச கல்வி என்ற பெயரில் தற்கொலை குண்டுதாரிகளை தயாரிக்கும் நடவடிக்கையே கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நூறு தற்கொலைதாரிகளை உருவாக்க முயற்சித்தால் குறைந்தது 50 ஆயிரம் பேராவது தெரிவுசெய்திருக்க வேண்டும். இது இடம்பெறுவது தெரிந்தும் அரசியல் தலைவர்கள் வேடிக்கையே பார்த்தனர் என அதுரலியே ரதன தேரர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதன்போது தெரிவிக்கையில்,
இஸ்லாம் பயங்கரவாதம் குறித்து எம்மால் பேச அச்சமாக உள்ளது, தேர்தல் வாய்ப்புகளுக்காக நாம் வாய்மூடி இருக்கின்றோம். முதலில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் பிரதான கட்சிகளுடன் இணைய வேண்டும். அல்லது கொள்கையுள்ள கட்சிகளை சார வேண்டும். இந்த ஆட்சி பலவீனமானது. ஜனாதிபதிக்கு இந்த தலைமைத்துவத்தை கொண்டு நடத்த முடியாது என்பதை அவர் உறுதிப்படுத்திவிட்டார். நாட்டில் தேசத்துரோக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோல் பிரதமர் இந்த துரோக செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும். நாம் தலைமைத்துவத்தை ஏற்க தயாராகவே உள்ளோம்.
ஒரு சிறு குழுவினரின் தீவிரவாதக் கொள்கைக்கு முழு இனமும் அடிபணிய வேண்டிய நிலைமை மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ளது. இன்று இங்கும் மத்ரஸா பாடசாலைகள் உருவாக்கப்பட்டு பெளத்தர்களுக்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து புலனாய்வு தகவல் கிடைகின்றது. இதற்கு கோடீஸ்வர வியாபாரிகள் உதவுகின்றனர். ஜே.வி.பியினருக்கு இது தெரியாதிருக்கலாம். ஆனால் அவ்வாறான நபர்களே வீடுகளில் பயங்கரவாதிகளை வளர்க்கின்றனர். இன்று இந்த நாட்டினை இரத்த வெள்ளத்தில் ஓடவிடவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த நாட்டிலேயே ஐநூறு தற்கொலைதாரிகள் இருக்க வாய்ப்புள்ளது. ரணில் விக்கிரமசிங்கவும் அவருடன் உள்ள ஒரு குழுவும் புலனாய்வு பிரிவை தண்டிக்கும் நிலையில் உள்ளனர். முழுமையாக ஐக்கிய தேசிய கட்சி இதற்கு இணக்கம் தெரிவிப்பதாகத் தெரியவில்லை.
இஸ்லாமிய கல்வியை கற்பிக்க கிழக்கில் சர்வதேச பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி என்ற பெயரில் தற்கொலை குண்டுதாரிகளை தயாரிக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை இடம்பெறுவது தெரிந்தும் அரசியல் தலைவர்கள் வேடிக்கையே பார்த்தனர் இதனை முழுமையாக தடுக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் மக்களும் உதவி செய்ய வேண்டும். இதற்கான மாற்று நகர்வுகளை உருவாக்க வேண்டும். ஆறு மாதத்தில் புதிய தலைமைத்துவம் ஒன்றினை உருவாக்கி மாற்றுவோம் என்றார்.
vidivelli
I think he is very far from truth...
ReplyDelete