ஈராக் - சிரியா போன்று இலங்கையிலும், தாக்குதலுக்கு திட்டம்..? ட்ரோன் கமராக்கள் சொல்லும் தகவல் என்ன?
ஈராக் , சிரியா நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களை போன்று இலங்கையிலும் அதிரடி தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட அதிர்ச்சித் தகவலொன்று தெரியவந்துள்ளது.
இலங்கை வந்த அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் நடத்திய புலனாய்வு விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.
ட்ரோன் கேமராக்களில் கைக்குண்டுகளை பொருத்தி ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்றை அனுப்பி தாக்குதல்களை நடத்த இவர்கள் திட்டம் வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து அல்லது முக்கிய கேந்திர நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த இவர்கள் திட்டம் வகுத்திருந்ததாக தெரிகிறது. நேற்று சம்மாந்துறையில் மீட்கப்பட்ட ட்ரோன் கமராக்கள் மூலம் கிழக்கில் தாக்குதல் நடத்த வைத்திருந்த திட்டம் அம்பலமாகியுள்ளதாக பொலிஸ் சொல்கிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பு நடத்திய இப்படியான தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தன.அப்படியான தாக்குதல்களை எதிர்கொள்வது அல்லது திடீரென முறியடிப்பது பாதுகாப்பு தரப்புக்கும் சிரமமானதென சொல்லப்படுகிறது.
விசாரணைகள் புதிய கோணங்களில் !
இலங்கை வந்து விசாரணைகளுக்கு உதவிவரும் அமெரிக்க நிபுணர்கள் செய்மதி படங்களின் உதவிகளுடன் நவீன தொழிநுட்ப அடைப்படையில் விசாரணைகளை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
சக்திவாய்ந்த வகையில் தயாரிக்கப்பட்ட குண்டுகளை தயாரித்துக் கொடுக்க வெளிநாட்டில் இருந்து யாரும் வந்துபோனார்களா என்பதை பற்றியும் விசாரணை நடக்கிறது.
குண்டு தயாரிக்கப்பட்ட வெல்லம்பிட்டி வீடு மற்றும் தற்கொலைதாரிகள் பாவித்த 130 சிம் கார்ட்டுகள் குறித்து விசாரணைகள் நடக்கின்றன.
tamilan
இந்த செயல்களை கண்டுபிடித்து அதை செயல்படுத்துபவர்களால்தான் இதன் பாரதூரம் நன்றாக தெரியும் ஆகவே இந்த கலையை அமெரிக்காதான் ISIS என்ற பயங்கரவாதிபளுக்கு அனைத்தையும் கற்பித்து கொடுத்து இவ்வாறான நுனக்கமான செயல்களையும் கட்டகொடுத்துள்ளார்கள் தற்போது ஏதோ புதிய விடத்தை கண்டுபிடித்தவர்கள் போல் கதைக்கின்றார்கள்
ReplyDeleteநம் நாட்டு மக்கள் இந்தளவு அரேபிய மடையர்கள் அல்ல!
WELL SAID BROTHER
ReplyDelete