Header Ads



முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து வாழ்த்தியவ​ரே, தற்போது விமர்சனம் செய்கின்றார் - மஹிந்த

முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தவ​ரே, தற்போது விமர்சனம் செய்கின்றார் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

மிகவும் சிறந்த நிதியமைச்சர் என சர்வதேச விருது பெற்ற, நிதியமைச்சரை நீக்கிவிட்டுதான், புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டார். புதிய நிதியமைச்சர் பழைய நிதியமைச்சருக்கு முத்தம் கொடுத்து வரவேற்றார். ஆனால், இந்த அரசாங்கத்தின் இறுதி வரவு- செலவுத்திட்டத்தையே, பழைய நிதியமைச்சர் விமர்சிக்கின்றார் என்றார்.


No comments

Powered by Blogger.