சம்மாந்துறை பள்ளிவாசல் நிர்வாகிகளே, இது உங்களின் கவனத்திற்கு...!
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து இன்றுவரை 400 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 47 பள்ளிவாசல்கள் இதுவரை பதிவு செய்து கொள்ளாதிருக்கின்றன என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களின் பதிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலே அவர் விடிவெள்ளிக்கு இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,
‘பள்ளிவாசல்கள் அனைத்தும் கட்டாயமாக திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும். சம்மாந்துறைப் பிரதேசத்தில் 57 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அவற்றில் 10 பள்ளிவாசல்களே திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டுள்ளன. 47 பள்ளிவாசல்கள் இதுவரை தம்மைப் பதிவு செய்து கொள்ளாதுள்ளன. அப்பள்ளிவாசல்களை தாமதமின்றி பதிவு செய்து கொள்ளுமாறு கோரியுள்ளோம்.

சம்மாந்துறைப் பகுதியில் மஜ்லிஸ் சூரா என்ற அமைப்பொன்றின் கீழ் இப்பள்ளிவாசல்களின் நிர்வாகம் ஒருமுகப்படுத்தப்பட்டு சிறந்த அமைப்பாக இயங்கி வருகிறது. ஸக்காத் வழங்கல் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களுக்கான சம்பளம் வழங்கல் எனும் பணிகள் மஜ்லிஸ் சூராவினாலே முன்னெடுக்கப்படுகின்றன. இது நல்லவோர் ஏற்பாடாகும். என்றாலும் பள்ளிவாசல்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும்.
பள்ளிவாசல்கள் பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ள பள்ளிவாசல்களில் 5 பள்ளிவாசல்களின் பதிவுகளே நிலுவையில் உள்ளன. சில குறைபாடுகள் காரணமாக அவை பதிவு செய்யப்படவில்லை.
முஸ்லிம் சமய விவகார அமைச்சு பள்ளிவாசல்களை சட்டரீதியாக ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எனவே பள்ளிவாசல்கள் மஜ்லிஸ் சூரா போன்ற அமைப்புகளின் கீழ் இயங்கி வந்தாலும் கட்டாயமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்’ என்றார்.
Post a Comment