பலாக்காய் வெட்டவா கோத்தபாய, குடியுரிமையை இரத்துச் செய்கிறார்...?
நான் அறிந்த வரையில் கோத்தபாய ராஜபக்ச அவரது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான ஆவணங்களை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் கையளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,
நான் அறிந்த வரையில் கோத்தபாய ராஜபக்ச அவரது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான ஆவணங்களை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் கையளித்துள்ளார். இந்த மாதத்திற்குள் அமெரிக்கா இது சம்பந்தமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இதனடிப்படையில், கோத்தபாய ராஜபக்ச நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத வீரவங்ச,
தனது பாதுகாப்புக்கு கவசமாக வைத்திருந்த குடியுரிமையையே அவர் தனக்கு வேண்டாம் என இரத்துச் செய்கிறார். போராட்ட களதில் இறங்க அவர் குடியுரிமையை இரத்துச் செய்யவில்லையா, பலாக்காய் வெட்டுவதற்காகவா அவர் அதனை இரத்துச் செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதைதான்!
ReplyDelete