Header Ads



அல்பலாஹ் பாடசாலையில், புதிய கட்டிடம் திறப்பு - சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிப்பு


99 ஆவது வருடத்தில் கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு பிரதேசம் போரத்தொட்ட அல்பலாஹ் கல்லூரி வரலாற்றுச் சிறப்புமிக்க  அடையாளத்தை  4 /4 /2019 வியாழக்கிழமை பதிவாக்கிக் கொண்டது.

 அதாவது கல்லூரியின் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாக 2018 ஆம் ஆண்டு ஓ எல் பரீட்சை எழுதிய மாணவ மாணவிகளின் பெறுபேறுகளில் 9ஏ எடுத்து சாதனை படைத்த மாணவியுடன் நீர் கொழும்புப் பிரதேசத்திலேயே இல்லாத  அதிகூடிய வகுப்பரை இடவசதியுடன்  கூடிய 3 மாடி கட்டிடம் கிடைக்கப்பெற்றது.

  நேற்றைய தினம் எது பாடசாலையில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடிக்கட்டிடத்தின் கீழ்ப்பகுதிகள் மாணவர்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக திறந்து மாணவர் பாவனைக்காக  கையளிக்கப்பட்ட வைபவம் நடைபெற்றது 

போரத்தொட்ட ஊருக்கு மூன்றாவது முறையாக  வருகை தந்த  மேல் மாகாண முதலமைச்சர் இசுர  தேவப்பிரிய எமது  பாடசாலையின் புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லாவும் பங்கேற்றார்.

2018 இல்G C E ,O/L பரீட்சை எழுதி 9A  மற்றும் 8A ,7A ,6A ,5 A, என்று சிறந்த பெறுபேர்களைப் பெற்ற மாணவிகளுக்கு  பாராட்டுச் சின்னம் மற்றும் 9A எடுத்த சாதனை மாணவிக்கு கல்வி ஊக்குவிப்பு நன்கொடையும் பழய மாணவர் சங்க நிர்வாகத் தலைவர் சகோதரர் ஜவ்ஹர் ரஹ்மான். அபிவிருத்திச்சங்கம்  சார்பாக சகோதரர் பாயிஸீன் ஆகியோர்களால் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.


1 comment:

  1. மாஷா அல்லாஹ்! போருதொட்ட அல்-பலாஹ் கல்லூரி மேலும் பல பல சாதனைகள் புரிந்திட வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Powered by Blogger.