பிக்குகளுக்கு மாத்திரம் காப்புறுதியை வலியுறுத்திய அமைச்சர், சர்வ மத தலைவர்களுக்கும் என உத்தரவிட்ட ரணில்
பிக்குகள் உட்பட சர்வ மத தலைவர்களுக்கான காப்புறுதி முறைமையொன்றை செயற்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் முன்வைக்குமாறு புத்தசாசன அமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இது தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பிக்குகளுக்கான காப்புறுதி முறைமையொன்றை கொண்டுவர வேண்டும் என புத்தசாசன அமைச்சர் பிரேரணையொன்றை முன்வைத்த போது சர்வமத தலைவர்களுக்கும் பொதுவாக இதனைக் கொண்டுவருமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment