Header Ads



முனாஜித் மௌலவியை தேடுகிறோம் - வவுனியா பொலிசார் தெரிவிப்பு

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நாட்டில் நிலப்பரப்பை கோரி இஸ்லாமிய மக்கள் போரில் ஈடுபடவில்லை எனவும் பொறுமையின் எல்லை தாண்டியுள்ளதால், போராட்டம் நடத்தி இஸ்லாமியர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என மௌலவி அந்த காணொளியில் கூறியிருந்தார்.

இந்த காணொளி தொடர்பாக பல தரப்பினர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், செட்டிக்குளம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த முனாஜித் என்ற மௌலவியே சமூக வலைத்தளத்தில் இந்த காணொளியை வெளியிட்டிருந்தார். 8 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய மௌலவி பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய வவுனியா மற்றும் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த மௌலவி தௌஹீத் ஜமாத் அமைப்பினை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. மக்கள் இடையே நச்சுக்கருத்துக்களைப் பரப்பக்கூடிய இந்த முனாஜித் மௌலவி போன்றோர் நிச்சயமாகத் தண்டிக்கப்படவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டிற்குள் வாழ்ந்துகொண்டு, பழிக்குப்பழி வாங்கவேண்டும், சட்டத்தைக் கையில் எடுக்கவேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது எவ்வளவு மேசமான செயல்?

    அந்தக்காலத்தில், மக்கா ஒரு நாடு; மதீனா வேறொரு நாடு! எனவே இரு நாடுகளும் யுத்தம் செய்தன. ஆனால், ஸ்ரீ லங்கா ஒரு ஜனநாயக நாடு. இதற்குள் நடக்கும் சண்டைகள், அரசினாலும் நீதிமன்றங்களினாலும் தான் தீர்க்கப்படவேண்டும். நினைத்தபோதெல்லாம் திருப்பி அடிக்கவோ சண்டை இடவோ கூடாது. அப்படி இஸ்லாம் சொல்லவில்லை. எனவே, அன்புள்ள முஸ்லீம் சகோதரர்களே, இந்த முனாஜித் மௌலவி போன்றோர்களைக் காட்டிக்கொடுங்கள். அவர் தண்டிக்கப்படவேண்டும். அவரைப் போன்றோரும் ஏனையோருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

    ReplyDelete
  2. இஸ்லாமிய நாட்டில்
    வாழுகின்றோம் என்
    ற நினைப்பா இவனு
    களுக்கு..
    அளவுக்கதிகமான உரி
    மைகளை இந்நாட்டில்
    அனுபவித்ததன் கொ
    ழுப்பு இது.. தவிர
    TJ வழியில் செல்வந்
    தனாக இருப்பான்
    போலும்..அடே எருமை
    களே..இலங்கை முஸ்
    லிம்களில் 90%வீதமான
    வர்கள் ஏழைகள் என்
    பதை மறந்திடாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.