Header Ads



டுபாயில் நடந்தது என்ன..? விரைவில் விளக்குவேன் - நடிகர் ரயன்


கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால், சுமார் 18 மணித்தியால விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நடிகர் ரயன் வென்ரோயன், வெலிகம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கஞ்சா போதைப்பொருளை, தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே, அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விமான நிலையத்தில் வைத்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த நடிகர் ரயன், டுபாயில் நடந்த விடயங்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும், இன்றும் ஓரிரு நாள்களில் வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.