திருமலை ஆயர் இல்லத்திற்கு, ஹிஸ்புல்லா விஜயம்
(அப்துல் சலாம் யாசீம்)
கத்தோலிக்க சமயம், கிரிஸ்தவ சமயம் மற்றும் கிரிஸ்தவ நாகரீகம் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு உடனடியாக விண்ணப்பம் கோருமாறு கல்வி அமைச்சுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் திருகோணமலை ஆயர் கலாநிதி மரியாதைக்குரிய அருட் தந்தை நொய்ல் இமானுவேல்லுக்குமிடையிலான சந்திப்பு இன்று (02) திருகோணமலையில் உள்ள ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
கலாநிதி நொய்ல் இமானுவேல்லின் அழைப்பின் பேரில் திருமலை ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதன்போது கத்தோலிக்க சமயம், கிரிஸ்தவ சமயம், கிரிஸ்தவ நாகரீகம் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என நொய்ல் இமானுவேல் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் முன்வைத்ததையடுத்து உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு கல்வி அமைச்சுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் கிழக்குமாகாணத்தில் காணப்படும் கிறிஸ்தவ சமூகத்தின்சார்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் மரியாதைக்குரிய நொய்ல் இமானுவேல்லினால் ஆளுநருக்கு விடுக்கப்பட்டது.
அது தொடர்பாக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு இது தொடர்பாக கவனம் செலுத்துமாறு வேண்டிக்கொண்டார்.
ஆளுனர் ஹிஸ்புல்லா அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். யாரும் எதிர்பார்காத சிறப்புடன் செயல்படுவது மகிழ்ச்சி.
ReplyDelete