பாராளுமன்றில் கீழ்த்தரமான வார்த்தைகள் பறந்தன, கலரியிலிருந்து வெளியேறிய மாணவர்கள்
எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் இன்று சபையில் மிகவும் கீழ்த்ரமான வார்த்தை பிரயோகங்களால் வாக்வாதம் ஏற்பட்டது.
இதன்போது பாராளுமன்ற பார்வையாளர் கலரியில் இருந்து சபை நிகழ்வுகளை அவதானித்துவந்த மாணவர்கள் அங்கிருந்து அகற்ற நடவடிக்ககை எடுக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈ,டி.ஐ. நிறுவனத்தில் பணம் வைப்புசெய்த பல இலட்சம்பேர் இன்று அந்த பணத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் வீதியில் இறங்கி போராடுகின்றனர். அரசாங்கம் இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.
ஆனால் அரசாங்கம் ஈ,டி.ஐ. நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அராசாங்கத்தில் இருக்கும் ராஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்கவே காரணமாகும்.அவர் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையை பாதுகாத்து வருகின்றார். சட்ட நடவடிக்கை எடுக்க அவர் தடையாக இருந்து வருகின்றார் என தெரிவித்து ரஞசன் ராமநாயக்கின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
இதன்போது சபைக்குள் வந்த ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து, நான் இல்லாத நேரத்தில் என்மீது பொய் குற்றச்சாட்டுக்களை லான்சா எம்.பி. முன்வைத்தார். அதனால் நான் தெரிவிக்கிறேன் நீர்கொழும்புக்கு போதை பொருளை கொண்டு வந்து நீர்கொழும்பை போதையின் கேந்திரமாக்கி இருக்கின்றார் என தெரிவித்து அவரும் லான்சா எம்.பியை நோக்கி மோசமான வார்த்தை பிரயோகங்களை தெரிவிக்க ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment