கைது செய்யப்பட்ட மௌலவியிடம் தீவிர விசாரணை - நாட்டைவிட்டுச் சென்ற டுபாய் நாட்டினர் பற்றியும் விசாரிப்பு
வரகொபொல பிரதேசத்தில் வான் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஹெம்மாத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவியை, இரண்டு தினங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவரும் முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மௌலவி 2 வாரங்களுக்கு குறித்த வானை வாடகைக்கு பெற்றுள்ளார் என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
டுபாயிலிருந்து வருகைத்தந்த சிலரை அழைத்துக்கொண்டு காத்தான்குடி, நீர்கொழும்பு, சிலாபம், கண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
டுபாயிலிருந்து வருகைத்தந்திருந்தவர்கள், கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நாட்டைவிட்டு புறப்பட்டுச்சென்றுள்ளனர்.
Post a Comment