சதிவலையில் சிக்காது பயங்கரவாதத் தாக்குதல் பற்றி, எல்லா கோணத்தில் இருந்தும் ஆராய வேண்டும்....!
கடந்த ஞாயிறு அன்று எமது சகோதர கத்தோலிக்க மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்புதாரியாக குறிப்பிட்ட ஒரு குழுவை அடையாளப்படுத்துவது சரியா...?
தவ்ஹீத் ஜமாத் என்று கூறிக்கொள்பவர்களுடன் எனக்கு நிறைய கருத்து முரண்பாடுகள் உள்ளன என்பதை நண்பர்கள் நன்கு அறிவர். எனக்கு அவர்கள் சூட்டியுள்ள காபிர், முர்தத், ஸின்தீக், காரிஜ், ஷீஆ போன்ற பட்டங்கள் இதற்கு சான்று. இருப்பினும் இந்த மிருகத்தனமான தாக்குதல்களுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று ஏற்றுக்கொண்டாலும், முற்றுமுழுதான பொறுப்புதாரிகள் அவர்கள்தான் என்ற முடிவுக்கு என்னால் வர முடியவில்லை.
இலங்கையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் தமக்கும் தவ்ஹீத் ஜமாத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறுகின்றனர்; தவ்ஹீத் ஜமாத்தின் பல பிரிவுகள் தமக்கும் NTJ வுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கூறுகின்றன; NTJ தமக்கும் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஸஹ்ரானுக்கும் தொடர்பில்லை என்று கூறுகிறது.
ஆக, முழுக் கவனமும் ஸஹ்ரான் எனும் தனி நபர்மீது குவிக்கப்பட்டுள்ளது. இதுபோல்தான் பின்லாடனை குறிவைப்பதாகக் கூறி ஆஃகானிஸ்தானை அழிளித்தார்கள்; ஈராக்கை அழித்தார்கள்; பாகிஸ்தானில் பலரைக் கொன்றார்கள்.
பின்வரும் கேள்விகள் என்னை உறுத்துகின்றன:
நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட இந்த மிக கொடூரமான சம்பவங்கள் நடந்த ஒரு சில நிமிடங்களிலேயே, எந்த விசாரணையுமின்றி, குறிப்பிட்ட இயக்கம் தொடர்பாகவும் நபர் தொடர்பாகவுக் பாதுகாப்புத் தரப்பினருக்கு அனுப்பட்டதாகக் கூறப்படும் ஓர் ஆவணம் கசியவிடப்படுகிறது. இது எப்படி...?
ISIS பொறுப்பேற்றது என்று செய்தி வெளியானது எந்த ஊடகத்தில்...? நியூஸீலாந்து பள்ளிவாசல் படுகொலைக்கு பதிலடியாக என்று அரசியல்வாதிகள் கூறுவது சரிதானா...? ஐசிஸ் இன் நடவடிக்கைகள் பள்ளிவாசல்களில் முஸ்லிம்களைக் கொத்துக்கொத்தாக கொல்வதில் இருந்துதான் ஆரம்பித்தது; முஸ்லிம்கள் மீதோ அல்லது இஸ்லாத்தின் மீதோ இவர்கள் அக்கரைக்கு கொண்டவர்கள் அல்ல என்பதை இது நிரூபிக்கிறது. அப்படியிருக்க எங்கோ நடந்த படுகொலைக்கு இஸ்லாத்தின் பெயரில் இலங்கையர் ஏன் பழிவாங்கப்பட வேண்டும்...? இந்த தாக்குதல்களால் இவர்களுக்கு என்ன லாபம்? இறுதி நன்மை அடையப்போவது யார்...?
ஜமாத்துத் தவ்ஹீத் வல் ஜிஹாத் என்று 1999ம் ஆண்டு அமைக்கப்பட்ட சிறு குழு, 2010ம் ஆண்டு அதி நவீன அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆயுதங்களுடன் ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டது எவ்வாறு...? காயப்பட்ட ISIS போராளிகள் இஸ்ரேலில் சிகிச்சை பெற்றது எப்படி...? இவ்வாறு சிகிச்சை பெறுவோரை நலன் விசாரிக்க இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு சென்றது ஏன்...? பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று இவர்கள் உள்ளே புகுந்த நாடுகளின் இன்றைய நிலை என்ன...? என்றெல்லாம் இலங்கை அரசு சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.
ஆக, சதிவலையில் சிக்காது, நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக எல்லா கோணத்தில் இருந்தும் ஆராயப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
- தாஹா முஸம்மில்
Pls translate this in sinhala
ReplyDeleteilangai arasu sindhithalum kadum poku bautha thurawihal sindhikamataner.muslimgalai kol andru konday ullaner. kaidhu nadawadikayin podhu appawi muslimgalum mati ullaner adhu matrum alladhu pillaihal saidha thawarukaha mulu kudumbamum kaidhu seyya pattu sithirawadhai seyya paduhindraner, awamana padutha paduhindraner, maana bangapadutha paduhindraner.awarhalin sothukaluku seal waika pattulladhu...................etc
ReplyDelete