புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களா, வில்பத்து பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என ஆராய வேண்டும்
வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களா வில்பத்தை அண்மித்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் எனபது தொடர்பில் ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் -04- இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வில்பத்து காடழிப்பு விவகாரம் இலங்கையில் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கும் நிலையில் பல கருத்துக்கள் அரசில் தரப்பினரால் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வில்பத்தை அண்மித்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்ட அனைவரும், வடக்கில் இருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment