என்னை இலங்கைக்கு, நாடு கடத்த வேண்டாம் - டுபாயில் மதூஷ் மேன்முறையீடு
பாதாள உலகத் தலைவன் மாகாந்த்துரே மதூஷ் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனக்கோரி மேன் முறையீடு செய்துள்ளார்.
இந்திய சட்டத்தரணிகள் சிலர் ஊடக இந்த மேன்முறையினத் டுபாய் மேல் நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில் அது தொடர்பில் தீர்மானிக்கும் வரை மாகாந்துரே மதூஷ் நாடு கடத்தப்பட வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டுபாயில் தனக்கு உள்ள சொத்துக்கள், அங்கு தான் பார்த்த வேலைகள், துபாயின் பொருளாதாரத்துக்கு தான் வழங்கும் பங்களிப்பு மற்றும் இலங்கையில் தனக்கு உள்ள உயிர் அச்சுறுத்தல் ஆகியவற்றை மையப்பபடுத்தியே அவர் இந்த மே முறையீட்டை தாக்கல் செய்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் மாகந்துரே மதூஷின் சகாக்கள் என சந்தேகிக்கப்படும் அவருடன் கைதுசெய்யப்பட்ட மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம் மற்றும் லங்கா சஜித பெரேரா ஆகியோர் நேற்று டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
மற்றொருவர் தொடர்பில் தீர்மானமெடுக்க சி.சி.டி.எனப்டும் கொழும்பு குற்றத்தடுப்புய்ப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில் ஆயுதத்தைக் காட்டி ஒருவரை அச்சுறுத்திய விவகாரத்தில், லங்கா சஜித பெரேரா எனும் மதுஷின் சாகா சி.ஐ.டியினரால் மாத்தறை நீதிமன்ற கைது உத்தரவொன்றுக்கு அமைய கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் நேற்று நீர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது அவருக்கு பிணையளித்துள்ள நீதிமன்றம் இன்று அவரை மாத்தறை நீதிமன்றில் கைது உத்தரவு தொடர்பில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பித்தது.
இந்த நிலையில் நாடு கடத்தப்பட்ட மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம் தொடர்பில் சி.சி.டி. மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவர் இன்று -03- காலை விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment