உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியை தெரிவுசெய்ய தொடர் ஆரம்பமாகின்றது
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியை தெரிவு செய்ய தீர்மானமிக்க உள்ளூர் தொடரான சுப்பர் மாகாண மட்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்தத் தொடருக்கான ஆரம்ப வைபவ நிகழ்வு நேற்று நடை பெற்றது.
எதிர்வரும் மே மாத இறுதியில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நத் தொடருக்கான இலங்கை அணியைத்த தெரிவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையிலான சுப்பர் மாகாண (super provincial) கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் மொத்தம் நான்கு அணிகள் மோதுகின்றன.
இதில் கொழும்பு அணிக்கு டினேஸ் சந்திமாலும்,கண்டி அணிக்கு திமுத் கருணாரத்னவும்,காலி அணிக்கு லசித் மலிங்கவும்,தம்புளை அணிக்கு அஞ்சலோ மெத்தியூஸூம் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடரில் பிரகாசிக்ககும் வீரர்கள் உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் உள்வாங்கப்படுவர்.
நேற்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் காலி அணித் தலைவரான லசித் மலிங்க சமுகமளிக்காத நிலையில் தலைவராக திரிமான்ன செயற்பட்டார்.
இதில் தம்புள்ளை அணிக்கு தலைமையேற்றுள்ள முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் விசேட கவனம் பெற்றார்.
காரணம், உபாதைக்குள்ளாகியிருந்த மெத்தியூஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.
சகல துறை ஆட்டக்காரரான அஞ்சலோ மெத்தியூஸ் பந்து வீச மாட்டேன் என்றும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment