சவூதி, றியாத் வாழ் இலங்கையர்கள் ஏற்பாட்டில் அனுதாப ஒன்றுகூடல் !
கடந்த வார இறுதியில் இலங்கையில் இடம்பெற்ற துக்ககரமான சம்பவங்களுக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்குமுகமாக, சவூதி அரேபியாவின் றியாத் மாநகரில் தொழில்புரியும் இலங்கை சகோதரர்களால் நாம் உங்களுடன் எனும் மகுடத்தில் ஓர் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை (27 சனிக்கிழமை) மாலை 6:30 மணிக்கு றியாத் நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் நடைபெறவுள்ள மேற்படி ஒன்றுகூடலுக்கு றியாத்திலுள்ள அனைத்து இலங்கை சகோதர சகோதரிகளும் வந்து கலந்துகொண்டு எமது தாய்நாடு பற்றிய ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துவதோடு, இந்த கொடூரமான தாக்குதல்களில் தங்களது உறவுகளை இழந்த இங்குள்ள இலங்கையர்களை சந்தித்து அவர்களுடன் ஆறுதல்களைப் பரிமாறிக்கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
(றியாதிலிருந்து அபூரய்யான்)
Post a Comment