முடிவெடுக்க முடியாமல், திணறும் சுதந்திரக் கட்சி
வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, இறுதி முடிவை எடுக்க முடியாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் நாளை மறுநாள் நடத்தப்படவுள்ள இறுதி வாக்கெடுப்பின் போது, வரவுசெலவுத் திட்டத்தை எதிர்ப்பதா, ஆதரிப்பதா என்று முடிவு செய்ய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டது.
எனினும், இந்தக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டதால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
வாக்கெடுப்பின் போது சிறிலங்கா அதிபர் முடிவை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் நாளை இறுதி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காது போனால், கூட்டணி தொடர்பான பேச்சுக்களில் நெருக்கடி ஏற்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு, மகிந்த ராஜபக்ச ஆதரவு பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment