போதையிலிருந்து விடுதலைபெற உறுதிமொழி
எதிர்கால சந்ததியினருக்காக போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை உரிமையாக்குவதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரப்பணிப்பதாக முழு தேசமும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்கும் “சித்திரைமாத உறுதிமொழி” நிகழ்வு இன்று மூன்றாம் திகதி முற்பகல் இடம்பெற்றது.
இதன் அங்குரார்ப்பண வைபவம் சமய தலைவர்களின் ஆசீர்வாதத்துடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
எதிர்கால சந்ததியினருக்காக போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டினை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக தான் போதைப்பொருள் பாவனையை தவிர்த்துக்கொள்வேன் என்றும் ஏற்கனவே அதற்கு பலியாகியுள்ள மற்றும் பலியாகாத தனது உறவினர்களையும், நண்பர்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் போதையிலிருந்து மீட்டுக்கொள்வதற்காக இத்தால் தன்னிடம் ஒப்படைக்கப்படும் மகத்தான கூட்டுப்பொறுப்பை உயர்ந்தபட்ச அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் நிறைவேற்றுவேன் என்றும் அனைவரும் திடசங்கற்பம்பூண்டு சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இந்த நிகழ்வு இலத்திரனியல் ஊடகங்களின் வாயிலாக நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டதோடு, அதனுடன் இணைந்ததாக தத்தமது நிறுவனங்களிலிருந்து அரச சேவையாளர்கள், பொதுமக்கள், பாடசாலை பிள்ளைகள் ஆகிய அனைவரும் இந்த சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment