குப்பைகளுக்கு எதிராக போராடிய, இளைஞன் புத்தளத்தில் கைது
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களை ஈடுபடுத்தி இன்று (05) ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய இளைஞனை, புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஒன்றுதிரட்டி, போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், 20 வயதுடைய குறித்த இளைஞனை, கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் தபால் நிலையத்துக்கு முன்னாள் இருந்து பேரணியாக சென்று, புத்தளம் கொழும்பு முகத்திடல் வரை கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் கொழும்பு முகத்திடலில் வீதியை மறித்து போராட்டம் நடத்தியதால், சில மணி நேரம் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியூடனான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரஸீன் ரஸ்மின்
காடுகள் அழித்து காணிகள் பிடிப்பதை கண்டுபிடித்த சிங்கள மக்களை திசை திருப்ப, எடுத்த தந்திரம் தான் இந்த “குப்பை” நாடகம்
ReplyDelete