எனது வாழ்க்கை, ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது - ஹரின்
தம்மை வெளிப்படையாக விமர்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ, கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் கோரியுள்ளார்.
ஞாயிறு ஆதாரனைகளுக்கு செல்ல வேண்டாம் என்று வைத்தியசாலையில் உள்ள தமது தந்தை தமக்கு அறிவுரை கூறியதாக தாக்குதல் நடந்த பின்னர் ஹரின் தெரிவித்திருந்தார்.
பாதுகாப்பு முன்னாள் அதிகாரிகள் இதனை தமது தந்தையிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனை கோடிட்டிருந்த கர்தினால் மல்கம் ரஞ்சித், இந்த தகவல் தமக்கு கூறப்பட்டிருந்தால், ஞாயிறு ஆராதனைகளை நிறுத்தியிருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கர்தினாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் ஹரின், கர்தினால் விமர்சனத்தினால் தாம் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்
பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரிகளே தமது தந்தையிடம் இதனை கூறியிருந்தனர். எனினும் அதனை தாம் அதி முக்கிய செய்தியாக எடுத்துக்கொள்ளவில்லை.
தாக்குதலின் பின்னரே இது தொடர்பில் பிரதமருக்கு தாம் இதனைக் கூறியதாகவும் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக, தமது வாழ்க்கையும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Post a Comment