கல்முனையில் ஏற்படப்போகும் புரட்சிகர மாற்றம்
கல்முனை பிரதேசத்தில் ,போதைபொருள் ஒழிப்பு தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை (06-04-2019) போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்பு மாநாடொன்று கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 வரை நடைபெறவுள்ளது .
கல்முனை புகைத்தல் போதைபொருள் ஒழிப்பு செயலனியின் ஏற்ப்பாட்டில் "ஒன்றினைவோம் ஒழுக்கமுள்ள போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்"எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.
இதன் போது கல்முனை பிரதேசத்தில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் கொள்கை பிரகடனம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மன்னார் உயர் நீதிமன்ற நீதிபதி ,அல்ஹாஜ் : என்.எம்.அப்துல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளார் .
மேலும் உலமாக்கள் , அரசியல் பிரமுகர்கள் , முப்படைகளின் உயர் அதிகாரிகள் அரச நிறுவனங்களின் தலைவர்கள் , பள்ளிவாயல் நிருவாகிகள் , புத்திஜீவிகள் , பொது அமைப்புகளின் நிருவாகிகள் , ஊர்ப்பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அத்துடன் கல்முனை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் விளம்பர பலகை மூலம் பொது அமைப்புக்களால் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.மேலும் இவ்வாறன செயற்பாடுகள் மூலம் முற்று முழுதாக கல்முனை பிரதேசத்தை போதைற்ற பிரதேசமாக மாற்றுவது இதன் நோக்கமாகும்.
Post a Comment