ஐ.தே.க. க்கு எதிராக களமிறங்கும், வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவோம்
தேசிய அரசாங்கம் தொடர்பாக எந்தவொரு அழைப்பும் எமக்கு வரவில்லை. அப்படி வந்தாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -02- செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாம் இன்னும் எந்தவொரு தீர்மானத்துக்கும் வரவில்லை. யாருக்கு ஆதரவு, வேட்பாளர் யார் என்பது குறித்து தலைவர் தான் தீர்மானிப்பார். கட்சியின் ஒருசிலரால் தீர்மானிக்க முடியாது. தேர்தல் வரும்போது உரிய நேரத்தில் அனைத்தும் அறிவிக்கப்படும்.
ஆனால், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக களமிறங்கும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவோம் என்பதில் மட்டும் நாம் உறுதியாக இருக்கிறோம்.
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே இந்த முடிவை எடுப்போம். தேசிய அரசாங்கம் தொடர்பாகவும் கருத்துக்கள் வெளியிடப்படுகிறது.
அவ்வாறான எந்தவொரு அழைப்பும் இதுவரை வரவில்லை. அழைப்பு வந்தால்கூட அது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதே எமது நோக்கமாகும் என்றார்.
Ungelethu kolhai UNP ku ethirahe vetriperuvethu. But makkal mun oru sirenthe thalaiverai konduvaruvethalle●●●●
ReplyDelete