போதைப்பொருளுக்கு எதிரான எனது நடவடிக்கைகளால் ஆத்திரம்கொண்டு குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம்
போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தி விட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”தீவிரவாதத்துக்கும் போதைப்பொருள் மாபியாவுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளன.
போதைப்பொருளுக்கு எதிரான எனது நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்டு சிறிலங்காவில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம்.
130- தொடக்கம் 140 வரையான ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிறிலங்காவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவர்களில் 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இந்த தாக்குதல்களுக்கும், இராணுவப் புலனாய்வுத்துறையை பலவீனப்படுத்தியதற்கும் அரசாங்கமே பொறுப்பு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment