இறுதி கிரியையில் பங்கேற்க, தேவாலயத்திற்கு சென்ற முஸ்லிம் நபர் கைது
நீர்கொழும்பு கட்டுவாபிடிய தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரு மகள்மாரின், இறுதிக் கிரியைகளின் மத வழிபாடு இடம் பெற்ற சிலாபம் கார்மேல் மரியாள் தேவாலயத்திற்குள் செல்ல முயற்சித்த முஸ்லிம் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
21 ஆம் திகதிய தாக்குதலில் சிலாபம் குருதுவத்தயைச் சேர்ந்த டெஸ்மி பிரியதர்ஷனி (தாய்) மற்றும் மகள்மார்களான மேரியின், சங்ஜனா, ரவீனா எலிஷா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இறுதிக் கிரியைகள் நடைபெறுவதற்கு முன்பு மத வழிபாட்டுக்காக சிலாபம் கார்மேல் மரியாள் தேவாலயத்தில் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அந்த சந்தர்ப்பத்தில் தேவாலயத்திற்குள் செல்ல முயற்சித்த முஸ்லிம் நபர் ஒருவரை தேவாலயத்தினுள் இருந்தவர்கள் பிடித்து சிலாபம் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் சிலாபம் ஜெயபிம பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சிலாபம் நகருக்கு வந்த சமயம் உயிரிழந்தவர்களை பார்ப்பதற்காக தேவாலயத்திற்குள் செல்ல முயன்றதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
Post a Comment